சூடான செய்திகள் 1

காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம்

(UTVNEWS|COLOMBO) – நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கணக்கெடுப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகள் நடமாடும் சகல பிரதேசங்களும் உள்ளடக்கப்படும் வகையில் 229 இடங்களில் 7 ஆயிரத்து 316 அதிகாரிகளால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இறுதியாக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய நாட்டில் 5 ஆயிரத்து 879 காட்டு யானைகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை