கிசு கிசுசூடான செய்திகள் 1விளையாட்டு

வரலாற்றில் முதல் தடவையாக; இலக்கங்களுடன் கூடிய ஜேர்சியில் இலங்கை அணி வீரர்கள்(photo)

(UTVNEWS | COLOMBO) -வரலாற்றில் முதல் தடவையாக இலக்கங்களுடன் கூடிய ஜேர்சியை வெளியிட்டது இலங்கை கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக முன்மொழியப்பட்ட பரிந்துரைகளின் ஓர் அங்கமாக, டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஜேர்சிகளின் பின்பக்கத்தில் இலக்கங்களுடன் விளையாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளைய தினம் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி விரர்கள் தங்கள் ஜேர்சி இலக்கங்களுடன் கூடிய படத்தை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை, கிரிக்கெட் ரசிகர்களை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளிலும் வீரர்களுக்கான ஜேர்சி இலக்கங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு உலகைப் பொறுத்தமட்டில் முன்னணி நட்சத்திர வீரர்களின் ஜேர்சி இலக்கங்கள் எப்போதும் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் இலக்கத்துடன் அந்த ஜேர்சியை வாங்கி அணிந்து கொள்வது வழக்கம்.

இவ்வாறு வீரர்களின் இலக்கங்களுடனான ஜேர்சியை வாங்கி அணிவது கால்பந்து விளையாட்டில் பிரபலமாக இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

Related posts

ரணிலின் அழைப்பினை மறுக்கும் சஜித்

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை

குண்டானவர்களா நீங்கள்?உங்களுக்கு ஓர் நற்செய்தி…