சூடான செய்திகள் 1

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?

(UTVNEWS | COLOMBO) -உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க குர்பானி ஆட்டுக்கு அதன் உரிமையாளர் 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார்.

குறித்த ஆட்டிக்கு ’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்தாக தெரிவித்தார்.

இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். மேலும், அதன் ரோமத்தில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துக்காகவே இதை நாங்கள் குறிப்பிட்ட விலைக்கு யாராவது வாங்கிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், முஹம்மது நிஜாமுதீன்.

Related posts

நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்

கொழும்பில் 21 மணிநேர நீர்வெட்டு

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது