விளையாட்டு

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அறிமுகம்

(UTVNEWS | COLOMBO) – 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இனையும் உள்ளடக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றதாக மெல்போர்ன் கிரிக்கெட் சபையின் தலைவர் மைக் கெட்டிங் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 மாதங்கள் இது தொடர்பான நீடித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவுடன் இணைந்து செயற்படாமை இதற்கு ஒரு தடையாக இருந்த போதும், தற்போது அந்நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு சாதகமான சூழ்நிலை. எனவே 2028ம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட்டை உள்ளடக்ககூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்

கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – குமார் சங்கக்கார

இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு