சூடான செய்திகள் 1

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ

(UTVNEWS| COLOMBO) – ஐதேக தனியாக சுடுகாட்டுக்கு செல்லலாம். உங்களுடன் சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை என
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசிய கட்சி இருக்கும் சிலர், இன்னமும் குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களுக்கு தலையெடுக்க விடாமல் அரசியல் புதைகுழியில் தள்ள முயற்சிக்கிறார்கள். கட்சிக்கு உள்ளே இருந்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அது நாம் அல்ல. அவர்கள் ஐதேகவின் உள்ளேதான் இருக்கிறார்கள். நான் சொல்வதில் உள்ள உண்மையை நாடு முழுக்க உள்ள இலட்சக்கணக்கான ஐ.தே.கவின் அடிமட்ட உறுப்பினர்கள் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

ஆகவே, ஐ.தே.கவில் உள்ள சேனநாயக்கவின், ஜயவர்தனவின், பிரேமதாசவின் புத்திரன்கள், பேரன்கள், கொள்ளுபேரன்கள் சிந்தித்து ஒழுங்கான முடிவை எடுங்கள். ஒருநாளில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.

மக்கள் விரும்பும் வேட்பாளரை பெயரிடுவதை ஐ.தே.கவின் உள்ளே இருந்து தடுத்து கொண்டு சிலர் இருக்கின்றனர். இவர்கள் எதிர்கட்சியுடன் இரகசிய உடன்பாடு கண்டுள்ளார்கள் எனவும் நான் சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

Related posts

எரிபொருள் விலை குறைவடையலாம்…

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும் – அமைச்சர் றிஷாட்!

இ.போ.சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன இராஜினாமா