சூடான செய்திகள் 1

நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடமேல், மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல்,மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே தமது இலக்கு – சஜித்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி கண்டியில் ஆர்ப்பாட்டம்