சூடான செய்திகள் 1

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி – பணம் கொள்ளை

(UTVNEWS | COLOMBO) –  இன்று(11) அதிகாலை 12.15 மணியளவில் பொல்கஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஊழியர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அரணாயக்க பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

கிளிநொச்சியில் வறுமையில் கல்விகற்கும் சில மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு