சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்

(UTVNEWS | COLOMBO) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்

இந்த விமான நிலையத்தில் வருடாந்தம் 90 இலட்சம் பயணிகள் வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவு செய்யப்படுவதுடன், விமான நிலைய பகுதிக்கு 3000 சதுர அடி அளவு பகுதி புதிதாக இணைக்கப்படவுள்ளது.

மேலும்,பயணிகளின் வசதிக்காக 80 விமான டிக்கட் கவுன்டர்கள் வரை அதிகரிக்கவுள்ளதாகவும் 6 குடிவரவு குடியகல்வு பிரிவுகளை புதிதாக நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி சாதனையாளருக்கு ஜனாதிபதி பாராட்டு