சூடான செய்திகள் 1

பார்தா விவகாரம்;உடன் தீர்வு; அகிலவிராஜ் அமைச்சரிடம் உறுதி!

இம் முறை பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தொடர்பில், கல்வி அதிகாரிகள் ஊடாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

வருடா வருடம் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கின்ற போது, பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தாவைக் கழற்றிவிட்டு வந்து பரீட்சை எழுதுமாறு வற்புறுத்தப்படுகின்றார்கள்.

பரீட்சை ஆரம்பிக்கும் முன்பே சுற்று நிருபம் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டு, சகல வலயக் கல்வி அலுவலகம் ஊடாக பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் கட்டாயம் முறையாக அறிவுறுத்தப்படல் வேண்டும் என்றும் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினேன்.

அதற்கு அவர் உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதி வழங்கினார் என, அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயற்பாடு முஸ்லிம் மாணவிகளுக்கு மாத்திரமல்ல, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலைக் கொடுக்கும் ஒரு செயலாகும். என ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

குறித்த பரீட்சை ஆரம்பிக்கும் போது நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘Pick Me’ வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

ஓடைகள் பல பெருக்கெடுப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்