சூடான செய்திகள் 1

ஐந்து மாதக் குழந்தையுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேற்றம்

கென்யாவில் தமது ஐந்து மாதக் குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச்சென்றதால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார் கென்ய நாடாளுமன்ற உறுப்பினர்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கென்ய நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட அவசரத்தினால், சுலேக்கா ஹசானின் (Zuleika Hassan) பிள்ளையை வேறு யாரும் பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. நாடாளுமன்றக் கட்டடத்தில் குழந்தைப் பராமரிப்பு நிலையம் இல்லாததால், குழந்தையை நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார் சுலேக்கா.

விதிமுறைகளின்படி, நாடாளுமன்றக் கூட்டத்தில் குழந்தை உட்பட வெளிநபர் யாருக்கும் அனுமதியில்லை.

சுலேக்காவின் நடத்தை மிகவும் அவமானத்திற்குரியது என மற்ற ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

தாய்மார்களுக்கு ஏற்ற வசதிகள் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் சுலேக்கா.

2017இல் கென்யாவின் அனைத்து அலுவலகங்களிலும் பிள்ளைகளுக்குப் பாலூட்டவும், உடை மாற்றவும் வசதிகள் அமைக்கப்படவேண்டும் என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக உலகெங்கும் உள்ள பெண் அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தம் மூன்றுமாதக் குழந்தையை ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக்குக் அழைத்துச்சென்றார்.

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர்

ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!