சூடான செய்திகள் 1

ஹிஜாப் விவகாரம் : மாணவியர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் -முஜிபுர் ரஹ்மான்

 

(UTVNEWS | COLOMBO) -சில பரீட்சை நிலையங்களில் ஹிஜாப் அணிந்துசென்ற முஸ்லிம் மாணவியர் ஹிஜாபுடன் பரீட்சை மண்டபங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவியர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பற்றிகம்பஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

உயர்தர முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்துசெல்ல பரீட்சைகள் திணைக்களம் அனுமதியளித்துள்ளபோதும் சொந்த விருப்பு, வெறுப்புக்களுக்காக மாணவியரைத் தடுக்கும் நபர்களுக்கு எதிராக கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.

Related posts

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

தொடரும் சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்