சூடான செய்திகள் 1

ஷாபி விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, குறித்த மனுவை திருத்தம் செய்வதற்காக ஒரு நாள் கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் குறித்த மனுவை திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை 27 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் ஊடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்க வேண்டும்” என நீதிமன்றத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று