(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்கவை நீக்க இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ விடுத்த உத்தரவுக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது இடத்திற்கு பதில் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஜெரோமி ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.