கிசு கிசுசூடான செய்திகள் 1

மாத்தறை யாசகரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி (video)

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியுள்ளதாக, அன்னதானம், போயா தினங்களில் தன்சல் வழங்கும் பிரசித்தமான யாசகர் கே.டப்ளியு ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பேன். சிறைக்கைதிகளை நீண்டநாள் தடுத்து வைத்திருக்கமாட்டேன். ஆகக் கூடிய தண்டனை ஒரு வருடங்களாகும். ஆகக் குறைந்த தண்டனை ஒரு வாரமாகும். கைதிகளை பார்க்க செல்வோருக்கு இடையூறுகள் இல்லை. தூக்கு மரம் இல்லை. உள்ளிட்டவற்றை செய்வேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

மாத்தறை நகரில் யாசகராக இருக்கும் ஹப்புஹாமி, ஒவ்வொரு போயான தினங்களிலும் தன்சல் வழங்குவார்.

யாசகம் செய்து சேமிக்கும் பணத்தை செலவழித்தே அவர், போயா தினத்தில் தன்சல் வழங்குவார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“நான் மாத்தறை நகரில் யாசகம் செய்கின்றேன். நான், தெவிந்துர கடைத்தொகுதியில் படுத்துறங்குவேன். மீதமிருக்கும் 2இலட்சம் ரூபாய், நெருங்கிய ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. நான், ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். தேர்தல்கள் செயலகத்துக்கு இரண்டு தடவைகள் சென்று அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.

நாட்டின் தற்போதை சூழ்நிலையை கருத்தில் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தீரமானித்தேன்.

வெசாக், போயா தினங்களில், மாத்தறையில் அன்னதானம், தன்சல் வழங்குவேன். நான் நினைக்கிறேன், நாட்டிலிருக்கும் பெரும்பாலானோருக்கு என்னை தெரியுமென,ஜனாதிபதித் தேர்தலி, சுவரொட்டிகள், பதாதைகளை நான் பயன்படுத்தமாட்டேன். பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒதுக்கப்படும் தேர்தல்கள் களம் போதுமானது” என்றார்.

Related posts

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் – 31 பேருக்கு பிணை

மத்திய சுற்றுச்சூழல் ஆணையகத்திற்கு புதிய தலைவர் நியமனம்