சூடான செய்திகள் 1

வெள்ளவத்தையில் அசாதாரண சூழ்நிலை: 9 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கும் வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது சுமார் 150 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கு ஒன்றுகூடியதாகவும், அவர்களை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வரும் பரிதாபநிலையில்

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது