சூடான செய்திகள் 1

இவ்வருட இறுதிக்குள் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி

(UTVNEWS | COLOMBO) –

2019ம் ஆண்டு இறுதிக்கு முன்னர் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படுமென நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை, ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுங்சாலை, கடவத்த – கெரவலபிட்டிய அதிவேக வீதி, மற்றும் மீறிகம – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகளே இவ்வாறு பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளன.

கடவத்த – கெரவலப்பிட்டிய வீதி திறக்கப்பட்ட பின்னர் கட்டுநாயக்கவில் இருந்து நேரடியாக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதே போன்று ரயில் பாதையில் கொங்கிறிட் கோபுரம் அமைக்கப்பட்டு அதன் மீது நிர்மானிக்கப்பட்டு வரும் அதிவேக நெடுங்சாலை மாத்தறை ஹம்பாந்தோட்டை வீதியில் அமைக்கப்பட்டு வருகின்றதாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts

இரத்த தான நிகழ்வில் 700ற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று(15) கூடுகிறது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்