சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO ) – வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் இன்று

மாளிகாவத்தையில் போக்குவரத்து மட்டுபடுத்தல்

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை