கிசு கிசுகேளிக்கைசூடான செய்திகள் 1விளையாட்டு

ரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?(photo)

(UTVNEWS | COLOMBO) – உலகக்கிண்ண போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.


இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக  மூன்று இருபதுக்கு 20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் கலந்துக் கொள்வதற்கு முன்னர், விராட் கோலிக்கு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ரோகித் சர்மாவுடனான விரிசல் குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கோலி, ‘ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நிடிக்கிறது’ என கூறியிருந்தார்.

அதன்பின்னர் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் அணிக்காக விளையாட வருவதில்லை. என் நாட்டுக்காக மட்டுமே’ என பதிவிட்டார். இதற்கிடையே ‘மியாமி பவுண்ட்’ எனும் பெயரில் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தினை டுவிட்டரில் கோலி வெளியிட்டார்.

அதில் ரோகித் இடம்பெறவில்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் விரிசல் உண்மைதான் என கூறினர். இந்நிலையில், மீண்டும் ‘ஸ்க்வாட்’ என பெயரிட்டு இன்று புகைப்படம் ஒன்றை கோலி வெளியிட்டுள்ளார். இதிலும் ரோகித் இடம்பெறவில்லை.

அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித் மற்றும் சில வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதில் விராட் கோலி இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் இருவரும் இரு அணிகளாகவே பிரிந்துள்ளனர் எனவும், விரிசல் வலுக்கிறது எனவும் கூறி கருத்துக்கள், டேக்குகள் செய்து இருவரையும் விமர்சித்து வருகின்றனர்.

Related posts

முதலமைச்சராகும் திரிஷா

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது