சூடான செய்திகள் 1

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் – சஜித்

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நேற்று அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று ஒட்டுமொத்த நாட்டிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.இந்த பொறுப்பை இறுதியில் யார் ஏற்றுக்கொள்வார் என்பதுதான் மக்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், நான் ஒரு விடயத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளேன்.

அதாவது, இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்றேன் என்று அறிவித்துவிட்டேன்.இனிமேல் இந்த விடயத்தில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

யார் எந்த பிரச்சினையை எமக்கு ஏற்படுத்தினாலும், எவ்வாறான தடைகள் வந்தாலும் நான் இந்தப் பயணத்திற்கு தயார் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” என சஜித் பிரமதாஸ தெரிவித்தார்.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

உயர்தர பரீட்சையில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு கீழ் மட்டத்தில்

தொடரும் குளிரான காலநிலை