சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு, 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப் பெற்றது.

அன்று முதல் சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த கோட்டாபய ராஜபக்ஸ, அதனை ரத்து செய்யுமாறு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டிருக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ரயில் புகையிரத பணி புறக்கணிப்பு

செப்பு தொழிற்சா​லை – 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் விஷேட விசாரணை

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்