சூடான செய்திகள் 1

ஐ.தே.க கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு: உறுப்பினர்கள் போர்க்கொடி

 

(UTVNEWS | COLOMBO) – புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐ.தே.க கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

கூட்டணியின் யாப்பு பிரகாரம் தலைவர் பதவி, ஐ.தே.கவுக்கும் பொதுச் செயலாளர் பதவி கூட்டணிக் கட்சிக்கும் வழங்கப்படவுள்ளது.அத்துடன், தலைமைத்துவ சபைக்கு அதிகளவான அதிகாரம் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், புதிய கூட்டணியின் முழுமையான அதிகாரம் ஐ.தே.க வசமே இருக்க வேண்டுமென அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 5 திகதி கூட்டணியுடன் உடபடிக்கை கைச்சாத்திட வேண்டாம் எனவும்
காலி முகத்திடலில் கட்சி ஆதரவாளர் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போமென ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட பலர் வலியுறுத்தியுள்ளனர். எனினும், சில உறுப்பினர்கள் திட்டமிட்டப்படி 5ஆம் திகதி கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமென கூறியுள்ளனர்.

Related posts

பெற்றோரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் 08 மாத குழந்தை வீதியில் இருந்து மீட்பு

ஈஸ்டர் தாக்குதலால் மாட்டிக்கொண்ட மைத்திரி – 2033வரை அவகாசம் கோருகின்றார்!

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை