சூடான செய்திகள் 1

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) – குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக, மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தை விசாரணை செய்த சிறப்பு சி.ஐ.டி. குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் குறித்த விசாரணை சிறப்பு சி.ஐ.டி. குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வைத்தியர் ஷாபியின் சொத்துக்கள், அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மற்றும் சில வங்கிக் கணக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்குழுவில் சி.ஐ.டி.யின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆகியோரின் மேற்பார்வையில், பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் பியசேன அம்பாவலவின் கீழ், சி.ஐ.டி.யின் நிதிக் குற்றங்களைக் கையாளும் விசாரணை பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனீ தலைமையிலான இக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள பாடகர் பிரேமரத்ன காலமானார்

ரணில் – சஜித் இடையில் நாளை முக்கிய சந்திப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – ரிஷாத் பதியுதீன்