சூடான செய்திகள் 1

ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசை கவிழ்ந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் – அசாத் சாலி

(UTVNEWS | COLOMBO) -வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசாங்கத்தை தோல்வியடைய செய்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அவர் மேற்கொண்ட அனைத்து இனவாத திட்டங்களும் தோல்வில் முடிந்துள்ளது. தற்போது மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்துகொண்டு அந்த கட்சிக்கு எதிராக இவ்வாறுசெயற்படுவதற்கு வெட்கப்படவேண்டும்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலதா மாளிகை முன்னிலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

காரணத்தினை வெளியிட்டார் விஜயகலா

மில்கோ தலைவர் இராஜினாமா!

மழையுடனான காலநிலை…