சூடான செய்திகள் 1

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

(UTVNEWS | COLOMBO) – பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி,

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் :- 

ரிசாட் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

ரவுப் ஹகீம் – கர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் :- 

அமீர் அலி – விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 

இராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா மற்றும் பைசல் காசிம் ஆகியோர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி அமைச்சர்

அப்துல்லா மஹ்ரூப் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர்

இதற்கு முன்னர் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் – தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சு, அமைச்சர் கபீர் ஹாசீம் – வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு பதவிகளை கடந்த ஜூன் மாதம் 19ம் திகதி ஏற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை