சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக 30,830 மாணவர்கள் தெரிவு

(UTVNEWS | COLOMBO) – 2018 ஆம் ஆண்டு இடம் பெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்கு 30,830 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க உயிரியல் விஞ்ஞானத்துறைக்காக 6,992 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப் படவுள்ளதுடன் பௌதீக விஞ்ஞானத்துறைக்காக 5,684 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அதேவேளை, வர்த்தகத் துறைக்காக 6,015 மாணவர்களும் கலைத்துறைக்காக 9,399 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி

பாட புத்தகங்களில் கொலை செய்யப்படும் தமிழ் சொற்கள்- சண்.குகவரதன்

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு