சூடான செய்திகள் 1

பேரூந்தில் இரத்தினகல்லை திருடியவர் கைது: வெள்ளவத்தை சம்பவம்

(UTVNEWS | COLOMBO) – இரத்தினகல் ஒன்றை திருடிய நபர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இரத்தினகல்லையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரத்தினகலின் பெறுமதி 82 மில்லியன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

வரட்சியானதுமான வானிலை

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று