சூடான செய்திகள் 1

எதிர்காலத்தில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்-வைத்தியர் ஷாபியின் விசேட குரல் பதிவு (video)

(UTVNEWS | COLOMBO) -குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை பிணையில் விடுதலை செய்யப்பட்டன் பின்னர் இலங்கை மக்களுக்கான விசேட குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த குரல் பதிவில் “எனக்காக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி மேலும் உள்நாட்டில் மற்றும் இன்றி வெளிநாட்டிலும் தனக்காக பிரத்தனையில் ஈடுப்பட்ட அனைவருக்கும் நன்றி குறிப்பாக இனைஞர்கள்
மிகவும் தியகம் செய்தனர்.தனக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக குருநாகல் வாழ் மக்கள் எனது உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த சம்பவத்தின் மூலமாக எமது சமூகம் ஒன்று பட்டுள்ளது. இந்த பிரச்சினை பெரும்பன்மை இனத்தவர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமாக பிரச்சினையல்ல இதில் குறிப்பிட்ட சிறு குழுவினரே ஈடுப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றுமையாக செயற்படுவோம் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.”

இதேவேளை,குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை பிணையில் விடுதலை செய்ய குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அதனடிப்படையில் 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீர பிணை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்