சூடான செய்திகள் 1

கொழும்பில் 14 மணி நேர நீர் வெட்டு!

(UTVNEWS | COLOMBO) -இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 10 மணி வரை  கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொலன்னாவ நகரசபைக்குட்பட்ட ராஜகிரிய, மொரகஸ்முல்ல, அத்துல்கோட்டோ, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையான பிரதான பாதை உட்பட அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

Related posts

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”