சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி இன்று விடுதலை?

(UTVNEWS | COLOMBO) – கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மக்கள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என்பதினால் வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இருந்த போது, குறித்த வழக்கில் பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித முதலிகே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே இன்றைய தினம் வைத்தியர் ஷாபி விடுதலையாவதற்கு அதிகவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குருநாகல் வைத்தியசாலையின் சர்ச்சைக்குரிய வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு