சூடான செய்திகள் 1

மதூஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரானுடன் தொடர்பு வைத்திருந்தவர் கைது

(UTVNEWS | COLOMBO) – கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரான் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலைகள் தொடர்பில் சதித் திட்டம் தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

அளுத்கம, அருணலு பிரதேசத்தில் நேற்று காலை 10.40 மணியளவில் கொழும்பு குற்றப் பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு செயல்திறன் குழுவொன்று உருவாக்கம்

தேர்தல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவவகம் இன்று முதல் செயற்படும்