(UTVNEWS | COLOMBO) – பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் மனித எச்சங்கள் இருப்பதாக பிரித்தானியாவை தலைமையாகமாக கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கொள்கலனில் மெத்தைகள், மருத்துவ மற்றும் வேறு வகையிலான கழிவுப் பொருட்களுடன் மறைத்து மனித எச்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கொள்கலன் இறக்குமதியுடன் இலங்கையில் உள்ள பிரபல வியாபாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரித்தானிய அரசு மேற்கொள்ளவுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.