வகைப்படுத்தப்படாத

பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய மருந்து பாதிப்பா? இல்லையா?

(UTVNEWS | COLOMBO) – அமெரிக்கப் பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய மருந்து இப்போது கிடைக்கிறது. அது `பெண்களுக்கான வயாக்ரா’ என்று அழைக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA), வைலீசி (Vyleesi) என்ற மருந்துக்கு அனுமதி அளித்திருப்பது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் அடுத்து வந்த வாரங்களில், அது மீண்டும் விவாதமாக உருவெடுத்தது. ஆசைகள் என்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றன.

பாலுறவில் நாட்டம் இல்லாத குறைபாடு (எச்.எஸ்.டி.டி.) உள்ள இளம்பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்காக இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு தொடர்ந்து பாலுறவில் நாட்டம் இல்லாத நிலைதான் இது என்று சிகிச்சை மருத்துவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவத்தில் உள்ள பெண்களில் 6 முதல் 10 சதவீதம் பேர் வரை இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

`பெண்களுக்கான வயாக்ரா’ தயாரிப்பதில் மருந்து தயாரிக்கும் துறையினர் இரண்டாவது முறையாக இப்போது முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த மருந்தின் செயல்திறன் பற்றி வைத்தியர்கள் சந்தேகங்கள் எழுப்பியதால், மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்துகளை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் வைத்தியர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Related posts

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்

வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை?

මගී ප්‍රවාහන බස්රථ සඳහා පනවන දඩය ඉහලට.