வகைப்படுத்தப்படாத

உடல் எடை குறைக்கும் இரண்டு சுவையான உணவு காமினேஷன்கள்

 

இரண்டு மிக சுவையான உணவு காமினேஷன்களை சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடுமாம்.அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அப்படி சுவையான அதேசமயம் வெயிட் குறைக்கிற உணவு காமினேஷன்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.சிக்கனும் மிளகாயும் மிகக் குறைந்த சிக்கன் சாப்பிட்டாலே உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு உண்டாகும்.

தசைகளும் வலுவடையும். எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்குளுக்கு சிக்கன் ஒரு நல்ல சாய்ஸ் அல்ல.அதை தவிர்ப்பதே நல்லது. அதேசமயம் எடை குறைக்க வேண்டும் என்பவர்கள் சிக்கனின் மார்புப்பகுதியை தேர்வு செய்யுங்கள்.

அதுதான் முழுக்க முழுக்க சதைப்பகுதியாக இருக்கும். அந்த சிக்கனோடு மிளகாயை மிக அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டீர்கள் என்றால் கிடுகிடுவென வேகமாக எடை குறையும்.

மிளகாயில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.அதிலுள்ள ஆண்டி ஆக்சிடணட்டுகள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பை எரிக்கிறது.அதனால் சிக்கன் பிரஸ்ட்டில் நல்ல மிளகாயை அரைத்த மசாலாவும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். மிகவும் சுவையான, எடையைக் குறைக்கும் ஒரு உத்தி தான் இது.

ஆப்பிள் – பீநட் பட்டர் – பட்டை பழங்களிலேயே ஆப்பிள் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்குமே தெரியும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே போகத் தேவையில்லை என்று சொல்வார்கள் வேர்க்கடலை பட்டர் மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.பலபேர் இதை கொழுப்புச் சத்து நிறைந்தது என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.

ஆனால் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு தான். சிறிதளவு எடுத்துக் கொண்டாலே வயிறு நிறைந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். இது உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். ஆப்பிளில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் இந்த பீநட் பட்டருடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.

அதேசமயம் மிகக் குறைந்த கலோரியில் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். கிரீன் டீயும் புதினாவும் பொதுவாக உடல் எடையைக் குறைப்பவர்களின் முதல் சாய்ஸாக கிரீன் டீ இருக்கும்.அதனுடன் சில துளிகள் எலுமிச்சையும் சில புதினா இலைகளும் சேர்த்துக் குடிக்க வேண்டும்.கிரீன் டீயுடன் எலுமிச்சையும் புதினாவும் சேர்க்கும் போது, பாலிபினைல் மற்றும் பெக்டின் அளவைக் கட்டுக்குள் வைத்து உடல் எடையை மிக வேகமாகக் குறைக்கச் செய்கிறது.

Related posts

மத்திய மாகாணத்திலும் அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் வேலை நிறுத்தபோராட்டம்

உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷிய பத்திரிகையாளர் பத்திரமாக உள்ளார்

Navy arrests 3 persons with ammunition