சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் சிறுவன் கைது

(UTVNEWS | COLOMBO) -திருகோணமலை சாம்பல்தீவு பாலத்தில் உள்ள பொலிஸ் காவலரின் வைத்து , பட்டா ரக வாகனத்தில் கேரளா கஞ்சா கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டா ரக வாகனமொன்றில் சாம்பல் தீவிலிருந்து புல்மோட்டைக்கு கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சாம்பல் தீவு பாலத்தில் வைத்து பொலிஸார் குறித்த பட்டா வாகனத்தை சோதனையிட்டபோது 2 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதோடு 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

புதிய சுற்றுலா தலமாக உருவாகும் இலங்கை!