சூடான செய்திகள் 1

உயர்தர தனியார் பரீட்சார்த்திகள் – ப.தி. இணையத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தல்

(UTVNEWS | COLOMBO) -கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களுக்கான அனுமதி அட்டைகள் தற்போது தபாலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டைகளை விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எழுதும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவும் இம்முறை பரீட்சை கடும் கண்காணிப்பின் கீழ் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒழுக்கவிதிகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடந்த வருடத்தில் பரீட்சை விதிறைகளை மீறிய உயர்தரப் பரீட்சார்த்திகள் 229 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பணியாளர் சபை அங்கத்தவர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

இடைநிறுத்தப்பட்ட 8 எம்பிக்களை அழைக்கும் மைத்திரியின் கட்சி!