கிசு கிசு

150 மில்லியன் டொலர்களுக்கு வாரிசான பூனை

(UTV|GERMAN) உலகின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் லாகர்ஃபீல்ட் (85) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இவர் சௌபெட் (Choupette ) என்ற பூனையை செல்லமாக வளர்த்து வந்தார். சௌபெட்டை பராமரிக்க வேலைக்காரர்களும் உள்ளனர். அந்த அளவிற்கு சௌபெட் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தது.

அந்த பூனை என்றால் கார்ல் லாகர்ஃபீல்டிற்கு உயிர். எந்நேரமும் தன் பூனையுடனேயே சுற்றித்திரிவார். சட்டம் சம்மதித்தால் தனது பூனையை திருமணம் செய்து கொள்வேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் மறைவிற்கு முன்னர் தனது பூனையின் பெயரில் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்தை எழுதி வைத்துவிட்டு, அதற்கு காப்பாளர்களையும் நியமித்துவிட்டு இறந்துள்ளார்.

 

 

 

Related posts

ரணிலின் அழைப்பினை மறுக்கும் சஜித்

நாளொன்றுக்கு 200 கொரோனா பலிகள்?

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்