உள்நாடு

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை, உப்புத் தொழிற்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நாட்டின் உப்பு நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உப்பு இல்லாமையால், 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்

அரசுப்பணியிலுள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்