சூடான செய்திகள் 1

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) -அடுத்த மாதம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கிரிவுள்ளயில் இடம் பெற்ற நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் உரையாற்றினார். ஹேன்டியகல சிறி இரத்தினபால மகா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

Related posts

2.00 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை…

கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை

தொடரும் தொடருந்து பணிப்புறக்கணிப்பு