சூடான செய்திகள் 1

மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மலையகத்திலுள்ள நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று(20) நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

நாளை மீண்டும் கூடவுள்ள விசேட தெரிவிக்குழு