கேளிக்கை

சினிமாவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தேன்

(UTVNEWS|COLOMBO) – ஆரம்ப காலகட்டங்களில் படங்கள் நன்றாக போகாததால் திரையுலகை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் இருவரும் கலந்துகொண்டனர்.

அப்போது விக்ரம் கூறியதாவது:-
“எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்கு பின்னால் என்று பிரிக்கலாம். சேதுவுக்கு முன்பு எனது படங்கள் நன்றாக போகவில்லை. எனவே சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன்.

ஆனால் அந்த படம் கொடுத்த வெற்றியால் இன்னும் நான் உற்சாகமாக சினிமாவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கடாரம் கொண்டான் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் என்னை பாராட்டி பேசினார்.

எனது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் சேர வேண்டும். நல்ல வசூல் பார்க்க வேண்டும் என்று உழைக்கிறேன். இவ்வாறு விக்ரம் கூறினார்.

Related posts

துல்கர் சல்மான் புகழாரம்

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்