சூடான செய்திகள் 1

நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் சடலமாக மீட்டு

அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நேற்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரட்டை சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக ஒரு மாணவி மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றொரு மாணவியின் சடலம் இன்று காலை 9.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் அக்கரப்பத்தனை பொலிஸார், அதிரடி படையினர் மற்றும் பொது மக்கள் இன்று காலை முதல் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இம்மாணவிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் எனவும், உயிரிழந்தவர்களான மதியழகன் லக்ஷ்மி என்ற மாணவியின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டு, அக்கர்ப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாணவியான மதியழகன் சங்கிதா இன்று காலை மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த இரு மாணவிகளின் சடலத்தையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related posts

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

எவன்கார்ட் வழக்கு – சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு