(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னர் மாகாணசபைகள் தேர்தலை நடத்தி அதன் மூலமாக ஐக்கிய தேசிய கட்சியை தன்வசப்படுத்தவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.
எனினும் தற்போதுள்ள அரசியல் நிலவரங்களை பார்க்கையில் பிரதான தேர்தல்களை நடத்தி நிரந்தர தீர்வுகளை ஏட்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலை தவிர்ந்து மாகாணசபைகள் தேர்தலை நடத்தவே முயற்சிகளை எடுக்கின்றார் என்றார்.
ஆனால் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை உருவாக்குவோம் என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை கொண்டுவர எந்த தீர்மானமும் இன்னமும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.