சூடான செய்திகள் 1

பள்ளிவாசல்களில் அறிவியுங்கள் மாணவர்கள் வீதியில் நின்றால் அழைத்துச் செல்வோம் – பொலிஸ்

(UTVNEWS | COLOMBO) -பள்ளிவாசல்கள் மூலம் மாணவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவியுங்கள்.இரவு 10 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடிக் கதைத்துக் கொண்டு இருக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி அனுர குணவர்தன தெரிவித்தார்.

நிட்டம்புவ சமூக பொலிஸ் பிரிவினால் கஹட்டோவிட்ட மகளிர் கல்வி வட்டக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊர்ப் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போது,

முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள இளைஞர்களை போதையிலிருந்து விடுவிப்பதற்கான உதவிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சட்ட முரணான செயற்பாடுகள் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால், அது தொடர்பில் பொலிஸாருக்கு உடன் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் அனுர குணவர்தன, இடமாற்றம் பெற்று நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். இவருடைய வருகையின் பின்னர், கஹட்டோவிட்ட முஸ்லிம் மக்களுடன் நடாத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு…