சூடான செய்திகள் 1விளையாட்டு

டோனிக்கு நெருக்கடி – மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து நீக்கம்

(UTVNEWS | COLOMBO) -ஓய்வு முடிவை வெளியிடுமாறு நெருக்கடி உள்ள நிலையில் மேற்கிந்தியத்தீவு தொடரில் டோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

38 வயதான டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியிலும் 20 இருபது போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண தொடரின் பின்னர் டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பதில் காலதாமதம் செய்து வருகிறார்.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 இருபது உலகக்கிண்ண போட்டிகளுடன் ஓய்வு பெறலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டோனி ஓய்வு முடிவு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும் அடுத்து வரும் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். அதாவது அவர் நீக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட நேரடியாக கொடுக்கப்படும் அழுத்தமாகவே இது கருதப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து டோனி விளையாடமாட்டார். இளம் வீரரான
ரி‌ஷப்பந்த் விக்கெட் காப்பளராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

12 வீடுகள் அடங்கிய தொழிலாளர் குடியிருப்பு தொகுதி தீயில் எரிந்தது

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

மரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு