சூடான செய்திகள் 1

வழமைக்கு திரும்பியது ருகுணு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள்

ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தின் மூன்று பீடங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடம் ஆகியனவே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.

இதனால், வெல்லமடம வளாகத்தின் சில பீடங்களும் காலவரையறை இன்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிவ்யோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க நான் தயார்

வெலே சுதாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது- கல்வியமைச்சர்