சூடான செய்திகள் 1

இலங்கைக்கு சீனா எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) – வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.இத்தகைய தலையீடுகள், சிக்கல்கள், குழப்பங்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர, ஒருபோதும் நன்மைகளைத் தர முடியாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,சீனா, இலங்கை போன்ற நாடுகள், மேற்கத்திய சக்திகளின், ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை.

சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடிக்கும் சீனா, ஒருபோதும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது, அத்தகைய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கிறது.

நாம் எப்போதும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும், வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக போராட வேண்டும், சொந்தமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த வெளிச்சக்திகள், நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது என்ற போர்வையில், மற்ற நாடுகளை எப்போதும் கொடுமைப்படுத்துவதுடன், மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுகின்றன.காலனித்துவ காலங்களில், அவர்கள் ஏனைய நாடுகளின் செல்வத்தை சுரண்டினர், மக்களை அடிமைப்படுத்தினர்.

Related posts

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களுக்கும் பிணை

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு கோரிக்கை