சூடான செய்திகள் 1விளையாட்டு

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்

(UTVNEWS | COLOMBO) -டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டால் இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு செய்து இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓரங்கட்டுவது தான் சரியாக இருக்கும் கருதப்படுகிறது. 6ஆவது மற்றும் 7ஆவது வரிசையில் விளையாடும் அவர் பந்துகளை அடிப்பதில் திணறி வருவதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் இது தொடர்பாக டோனியிடம் பேசுவார். அவரிடம் தானாக ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த நெருக்கடி காரணமாக டோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி