உள்நாடு

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

(UTV | கொழும்பு) –

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இரத்ததான முகாம் கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூரிய அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பிரியந்த உட்பட பிரதேச தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த இரத்ததான முகாமில் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் கே.ஹரிபிரசாத் இரத்ததானம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாண பாடசாலைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு.

editor

கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்