சூடான செய்திகள் 1

இலங்கை தபால் சேவையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக இலங்கை தபால் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6/2006 என்ற சம்பள சுற்றறிக்கைக்கு அமைய சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதால் பதவி உயர்வு, ஊதிய அதிரிப்பு உள்ளிட்ட விடயங்கள் கிடைக்காமல் கடந்த 13 வருடங்களாக 26,000 ஊழியர்கள் உள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை பாரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளனர்.

இவ்வாறான காரணங்களால் தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் – 10 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்