கிசு கிசுகேளிக்கைசூடான செய்திகள் 1

இந்திய அணி சதியால் தோல்வி..டோனியின் ஓய்வு எப்போது? துல்லியமாக கணிக்கும் ஜோதிடர்

(UTV|COLOMBO)- உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை சதி செய்து தோற்கடித்து விட்டார்கள் என்று தமிழக ஜோதிடர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் போடியிட்டன. இதில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்ததால், இந்தியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில் சேலத்தைச் சேர்ந்த தமிழக ஜோதிடர் ஒருவர் 6 மாதத்திற்கு முன்பே இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோற்கும் என்பதை கணித்திருந்த வீடியோ கூட சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து தற்போது தமிழகத்தின் பிரபல ஜோதிடரான சில்வியிடம் தமிழ் ஊடகம் ஒன்று இந்திய அணியின் தோல்வி குறித்து பேட்டி எடுத்த போது, அதில் இந்தியாவை சதி செய்தே வெற்றிப்பெற்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், அதாவது மழை பெய்த நாளை விட, அடுத்த நாள் தான் கோஹ்லியின் ஜாதகம் அவருக்கு சாதகமாக இருந்தது. அவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தது, ஆனால் சதி நடந்துவிட்டது.

சதிக்கு காரணம் கோஹ்லி செவ்வாய் நடத்திரமாக இருப்பதால், அந்த நாளில் சதி வெற்றி பெற்று விட்டது என்று கூறியுள்ளார்.

இந்த பருவ கால மழைகாலம் என்பது தெரிந்த விஷயம், அதை தெரிந்து கொண்டே வேண்டும் என்று இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டை நடத்தி, இவர்கள் இஷ்டத்திற்கு டக்வெர்த் லிவிஸ் விதி முறைப்படி யாரை வேண்டும் என்றாலும் ஜெயிக்க வைக்கலாம், தோற்க வைக்கலாம்.அதுவே ஒரு சதி தான், ஆரம்பித்திலிருந்தே மழை பெய்து கொண்டிருக்கிறக்கிறதை தெரிந்து கொண்டு, போட்டியை மாற்றியிருக்கலாம், ஆனால் மாற்றவில்லை.

போட்டி நடந்த மழை பெய்த அன்று கூட போட்டி நடந்திருயிருந்தால், சதியில் இந்தியா தோற்றிருக்கும், ஏனெனில் கோஹ்லியின் கன்னிராசியானது, அர்த்தாஷ்ம சனியால் கைகொடுக்கவில்லை என்பது தான் நம்முடைய கருத்து என்று கூறியுள்ளார்.

மேலும் டோனியின் ஓய்வைப் பற்றி கேட்ட போது, அவர் 2020-ஆம் ஆண்டு ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பின் இரண்டு வருடங்கள் கடுமையான இறக்கங்களை சந்திப்பார் என்று கூறியுள்ளார்.

Related posts

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை